Powered by Blogger.
Home » » ஜீவாவின் யான் தீபாவளி ரிலீஸ்

ஜீவாவின் யான் தீபாவளி ரிலீஸ்

Written By Unknown on Monday, 29 September 2014 | 02:31

ஜீவாவின் யான் தீபாவளி ரிலீஸ்.


ஒளிப்பதிவாளராக இருந்த ரவி.கே.சந்திரன், இயக்குநராக களமிறங்கியுள்ள படம் ''யான்''. ஜீவா ஹீரோவாகவும், 'கடல்' துளசி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் படமாக உருவாகியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 2ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று(செப்., 29ம் தேதி) நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவா, ஜான் படம் எனக்கு முக்கியமான படம்.

 இந்தாண்டு எனக்கு தீபாவளி, யான் தீபாவளி என்றே சொல்லலாம். யான் படத்தில் எல்லா காட்சிகளும் சவாலாக இருந்தது. குறிப்பாக டான்ஸ் மற்றும் சண்டைக்காட்சிகள் பெரும் சாவலாக இருந்தது. மொராக்கோ நாட்டில், பாலைவனம் மற்றும் விமானத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்படும் என்கிறார் ஜீவா.


SHARE

About Unknown

0 comments :

Post a Comment