Powered by Blogger.
Home » » எமிஜாக்சன் அறிமுக பாடலில் அமரகலபடுத்தி உள்ளார்

எமிஜாக்சன் அறிமுக பாடலில் அமரகலபடுத்தி உள்ளார்

Written By Unknown on Monday, 29 September 2014 | 02:38

எமிஜாக்சன் அறிமுக பாடலில் அமரகலபடுத்தி உள்ளார் 




ஹாலிவுட் நடிகை எமிஜாக்சனுக்கு தற்போது ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ஐ படம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு முன்பு அவர் சில படங்களில் நடித்திருந்தபோதும், இந்த படத்தில் ஹீரோ விக்ரமுக்கு ஒரு டிராக் என்றால், எமிக்கும் இன்னொரு அழகியலான டிராக்கை கொடுத்திருக்கிறாராம் ஷங்கர். 

 அதோடு, தனது படங்களின் கதாநாயகிகளை பாடல் காட்சிகளில் தேவதைகளாக நடனமாட விட்டு வரும் ஷங்கர், இந்த படத்தில் எமியை மிக அசத்தலாக காண்பித்திருக்கிறாராம். அதோடு ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் இணைந்திருப்பதால், ஊர் கண்ணெல்லாம் பட்டுப்போகும் அளவுக்கு எமியை தனது மேஜிக் கேமரா கண்களால், பார்ப்பவர்கள் சொக்கிப்போகும் அளவுக்கு அழகு பதுமையாக காண்பித்திருக்கிறாராம். சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது, தான் நடித்த சில காட்சிகளை பார்த்த எமிஜாக்சன், நானா இது நம்பவே முடியவில்லையே என்று ஆச்சர்யத்தில் உறைந்து போய் நின்றாராம். 

அதிலும், அவர் மட்டும் நடித்துள்ள அறிமுக பாடலான லேடியோ -என்று தொடங்கும் பாடலில் தங்க கிண்ணத்தில் நிலவு உதிப்பது போன்று செட் அமைத்து எமியை நடனமாட விட்டிருக்கிறார்களாம். அந்த காட்சியைப்பார்த்த எமி, சினிமாவில் இதைவிட என்னை யாராலும் அழகாக காண்பிக்க முடியாது. அத்தனை பேரழகியாக என்னை காண்பித்திருக்கிறார்கள் என்று சொல்லி சொல்லி புழகாங்கிதம் அடைந்தாராம். மேலும், இந்த பாடலை மட்டும் 20 நாட்கள் படமாக்க திட்டமிட்டிருந்த ஷங்கர், அதிரடி வேகத்தில் எமி அமர்க்களமாக நடனமாடியதால், ஒரே வாரத்தில் படமாக்கி முடித்து விட்டாராம். அந்த அளவுக்கு ஈடுபாடு காட்டி நடித்திருக்கிறார் எமிஜாக்சன். 


SHARE

About Unknown

0 comments :

Post a Comment