Powered by Blogger.
Home » » காஜல் அகர்வாலை அசிங்கமாக பேசிய கோட்டா சீனிவாசராவ்

காஜல் அகர்வாலை அசிங்கமாக பேசிய கோட்டா சீனிவாசராவ்

Written By Unknown on Monday, 13 October 2014 | 11:07

எதையாவது பேசி வம்பில் சிக்குவதும், தேவையற்ற கமெண்ட் அடிப்பதும் நடிகர் கோடடா சீனிவாசராவின் பழக்கம் என்று தெலுங்கு பக்கம் கூறுகிறார்கள்.

 தமிழில் சாமி, திருப்பாச்சி, பவானி. கோ உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.  நடிகை காஜல் அகர்வாலைப் பற்றிக் கேவலமாக கமெண்ட் அடித்து சிக்கலில் சிக்கிக் கொண்டுள்ளார். ராம்சரண் தேஜா, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்த 'கோவிந்தடு அந்தாரிவாடிலே' படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு ராம்சரணும் வரவில்லை, காஜல் அகர்வாலும் வரவில்லை. 
காஜல் அகர்வாலை அசிங்கமாக பேசிய கோட்டா சீனிவாசராவ்

அப்போது மைக்கைப் பிடித்துப் பேசிய கோட்டா சீனிவாசராவ், “ஹீரோயின்கள் அவர்களது அங்கங்களை மட்டுமே காட்டுவார்கள், பேச வர மாட்டார்கள். அதனால் காஜல் இங்கு வரமாட்டார்” என்ற ரீதியில் பேசியிருக்கிறார். ஆனால், திடீரென காஜல் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாக வர நேரிட்டது என விளக்கியிருக்கிறார் காஜல். அது கோட்டாவிற்கும், பத்திரிகையாளர்களுக்கும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய கோட்டா சீனிவாசராவ், தான் பேசியதை சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கெஞ்சியிருக்கிறார். இந்த விவகாரம் பெரிதாக்கப்படுமா, அல்லது  அப்படியே அமுக்கப்பட்டு விடுமா,  என்பது காஜல் அகர்வால் கையில்தான் உள்ளது என்கிறார்கள்.
SHARE

About Unknown

0 comments :

Post a Comment